/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோரகுப்பத்தில் வார சந்தை துவக்க விவசாயிகள் கோரிக்கை
/
கோரகுப்பத்தில் வார சந்தை துவக்க விவசாயிகள் கோரிக்கை
கோரகுப்பத்தில் வார சந்தை துவக்க விவசாயிகள் கோரிக்கை
கோரகுப்பத்தில் வார சந்தை துவக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 16, 2025 03:57 AM

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டையில் இருந்து, பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், கிருஷ்ணமராஜகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கோரகுப்பம் கிராமம் அமைந்துள்ளது.
தமிழக எல்லையோர கிராமமாக அமைந்துள்ள கோரகுப்பத்தில் வாரசந்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு வாரசந்தை துவக்கப்பட்டால், அருகில் ஆந்திர மாநிலம், பலிஜிகண்டிகை வார சந்தைக்கு சென்று கடை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்கின்றனர்.
கோரகுப்பம் பகுதியில் வார சந்தை துவக்கினால், கிருஷ்ணமராஜகுப்பம் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும், மாநிலம், கடந்து பலிஜிகண்டிகைக்கு சென்று கடை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
பலிஜிகண்டிகையில், வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் வார சந்தைக்கு கோரகுப்பம், ராஜாநகரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

