/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை கிளை நிலையம் இல்லாததால் 8 கி.மீ., துாரம் பயணிக்கும் விவசாயிகள்

ADDED : ஜூன் 07, 2025 10:48 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியை சுற்றி சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம், ஒரத்துார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இக்கிராமங்களில், 80,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
தற்போது, கால்நடைகளுக்கான சினை ஊசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, 8 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
அவ்வாறு செல்வோர், திருவாலங்காடு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரியகளக்காட்டூர் கால்நடை விவசாயிகளின் நலன் கருதி, கிளை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.