/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சவுக்கு மரத்துக்கு மாறும் விவசாயிகள்
/
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சவுக்கு மரத்துக்கு மாறும் விவசாயிகள்
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சவுக்கு மரத்துக்கு மாறும் விவசாயிகள்
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சவுக்கு மரத்துக்கு மாறும் விவசாயிகள்
ADDED : ஏப் 17, 2025 01:37 AM

ஆர்.கே.பேட்டை,:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்ற நெசவாளர்கள், விவசாயிகள் என, பலரும் சென்று விடுவதால், உழவு மற்றும் நெசவு தொழில் செய்ய தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவில் நெசவு மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்த தொழில்களில் நவீன இயந்திரங்கள் வந்தாலும், தொழிலாளர்கள் தேவை இன்னமும் இருந்து வருகிறது. விவசாயத்தில் நடவு, களை பறிப்பு, உரம் இடுதல், அறுவடை என, அனைத்து வேலைகளுக்கும் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட வேண்டியுள்ளது.
ஆனால், ஆட்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் நீண்டகால மரப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். பாரம்பரியமாக சவுக்கு பயிரிடுவது வழக்கம். இதற்காக, கடலுார் பகுதியில் இருந்து சவுக்கு நாற்றாங்கால் கொண்டு வரப்படுகிறது.
சவுக்கு நடவு செய்ததில் இருந்து இரண்டு - மூன்று ஆண்டுகளில் அறுவடைக்கு வரும். இதில் களை பறிப்பு, உரம், பயிர் பாதுகாப்பு என, எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால், மூன்று ஆண்டுகள் வரை நிம்மதியாக பாசனத்தை மட்டும் செய்து, லாபம் பார்க்க முடியும் என்பதால், விவசாயிகள் சவுக்கு பயிருக்கு மாறி வருகின்றனர்.