/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமற்ற தர்ப்பூசணி விதை வினியோகம் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை

ADDED : மார் 13, 2024 11:04 PM

சம்பா நெல் அறுவடைக்கு பின், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் கோடைகால பயிரான தர்ப்பூசணி வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பகுதிகளில், 1,500 ஏக்கர் பரப்பில், தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பல்வேறு கிராமங்களில் விதைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் பயிர் காலம், 75 - 90 நாட்களாக உள்ள நிலையில், தர்ப்பூசணி வளர்ச்சிக்காக பல்வேறு தருணங்களில் உரம் மற்றும் மருந்தினங்களை தெளிக்க வேண்டும். இதற்காக, 1 ஏக்கருக்கு 22,000 ரூபாய் வரை செலவிடுகின்றனர்.
வேளாண்மை துறை வாயிலாக, 1 ஏக்கருக்கு, 320 கிராம் தர்ப்பூசணி விதை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தர்ப்பூசணி விவசாயிகள் தெரிவித்ததாவது:
வேளாண்மை துறை வாயிலாக வழங்கப்படும் விதைகளில், ஒரு சில விதைகள் சரியான முளைப்பு மற்றும் வளர்ச்சி இருப்பதில்லை. தரமான விதைகளை வழங்க வேண்டும்.
மானிய விலையில் மருந்தினங்களை வழங்கினால், அதிகளவிலான விவசாயிகள் தர்ப்பூசணி பயிரிடுவர். இது அவர்களுக்கு கூடுதல் வருவாய்க்கு வழிவகுக்கும். அதை வாங்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருத்தணி நகரத்தில் தற்போது தர்ப்பூசணி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 1 கிலோ, 10-- - 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு துண்டு தர்ப்பூசணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
ஆனால், திருத்தணி ஒன்றியத்தில் தர்ப்பூசணி பயிரிட்ட விவசாயிகள் போதிய விளைச்சல் இல்லாததால் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி விவசாயி கூறியதாவது:
தற்போது, 15 ஏக்கர் பரப்பில் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளேன். எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லாததால், பயிருக்கு செய்த செலவு தொகையே எடுக்க முடியுமா என கவலையில் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்-