/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து வசதி கேட்டு தண்டலத்தில் உண்ணாவிரதம்
/
பேருந்து வசதி கேட்டு தண்டலத்தில் உண்ணாவிரதம்
ADDED : ஜன 19, 2024 09:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலம் ஊராட்சி. இப்பகுதியில் இயங்கி வந்த தனியார் மினி பேருந்து எட்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் அ.தி.மு.க. வினர் பகுதிவாசிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.