ADDED : செப் 20, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை, செப். 21-–
வீட்டிலிருந்து வெளியில் சென்ற மகள், மீண்டும் வீடு திரும்பவில்லை என, அவரது தந்தை அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அசுவரேந்தாபுரத்தை சேர்ந்தவர் லோகரஞ்சன் மகள் ரஞ்சனி, 23. இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம், வீட்டில் இருந்து வெளியில் சென்ற ரஞ்சனி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும், ரஞ்சனி குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
இதையடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசில் லோகரஞ்சன் புகார் கொடுத்துள்ளார். போலீசார், காணாமல் போன ரஞ்சனியை தேடி வருகின்றனர்.
