ADDED : செப் 20, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, செப். 21–
மகளை காணவில்லை என, பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 18 வயது மாணவி, திருத்தணி – அரக்கோணம் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம், வழக்கம் போல் கல்லுாரி சென்றவர், இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
