ADDED : நவ 15, 2026 09:56 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: வீட்டில் இருந்த தனது மகளை காணவில்லை என, அவரது தந்தை அளித்த புகாரின்படி, போலீசார் தேடி வருகின்றனர்.
பென்னலுார்பேட்டை அடுத்த வெலமகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பவானி, 21. பிளஸ் 2 முடித்த இவர், கடந்த 9ம் தேதி மாலை, வீட்டில் இருந்து வெளியே சென்று, அதன்பின் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜா, பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இப்புகாரின்படி வழக்குப் பதிந்த போலீசார், காணாமல் போன பவானியை தேடி வருகின்றனர்.
