/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகள் கண்முன்னே நடந்த சோகம் லாரியில் சிக்கி தந்தை உயிரிழப்பு
/
மகள் கண்முன்னே நடந்த சோகம் லாரியில் சிக்கி தந்தை உயிரிழப்பு
மகள் கண்முன்னே நடந்த சோகம் லாரியில் சிக்கி தந்தை உயிரிழப்பு
மகள் கண்முன்னே நடந்த சோகம் லாரியில் சிக்கி தந்தை உயிரிழப்பு
ADDED : மே 18, 2025 10:15 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 65; விவசாயி.
இவரது மகள் சுமதி, 35, இரண்டு நாட்களுக்கு முன், ராணிப்பேட்டை அடுத்த வாலாஜாபேட்டையில் இருந்து, தந்தையை பார்க்க சீனிவாசபுரத்திற்கு வந்தார்.
நேற்று மதியம் ஆறுமுகம், 'டி.வி.எஸ்., 50' பைக்கில் மகளை ஏற்றிக் கொண்டு, திருத்தணி பேருந்து நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே, எதிரே வந்த போர்வெல் லாரி மோதியது.
இதில், சுமதி லோசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆறுமுகம் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.
மேலும், உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.