/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் மீது பைக் மோதிய விபத்தில் மகளை தொடர்ந்து தந்தையும் பலி
/
கார் மீது பைக் மோதிய விபத்தில் மகளை தொடர்ந்து தந்தையும் பலி
கார் மீது பைக் மோதிய விபத்தில் மகளை தொடர்ந்து தந்தையும் பலி
கார் மீது பைக் மோதிய விபத்தில் மகளை தொடர்ந்து தந்தையும் பலி
ADDED : நவ 24, 2025 04:07 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில், 7 வயது மகள் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 33; லாரி ஓட்டுநர். இவர், மனைவி தமிழ்ச்செல்வி, 25, மகள் இலக்கியா, 7, மகன் இனியன், 5, ஆகியோருடன், கடந்த 16ம் தேதி, கவரைப்பேட்டையில் இருந்து அழிஞ்சிவாக்கம் நோக்கி, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெரவள்ளூர் பகுதியில், முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால், நிலை தடுமாறிய விஜயகுமார், காரின் பின்னால் மோதினார்.
இதில், படுகாயமடைந்த மகள் இலக்கியா, தந்தை விஜயகுமார் ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து நடந்த மறுநாள் இலக்கியா உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

