/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி முருகன் கோவில் குளம் பேரூராட்சி பெயருக்கு மாறுமா?
/
கும்மிடி முருகன் கோவில் குளம் பேரூராட்சி பெயருக்கு மாறுமா?
கும்மிடி முருகன் கோவில் குளம் பேரூராட்சி பெயருக்கு மாறுமா?
கும்மிடி முருகன் கோவில் குளம் பேரூராட்சி பெயருக்கு மாறுமா?
ADDED : நவ 24, 2025 04:06 AM
கும்மிடிப்பூண்டி: முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக, கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தை, பேரூராட்சி நிர்வாகம் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் முன், 4 ஏக்கரில் கோவில் குளம் உள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட இக்குளம், சத்திரம் சாவடி வகை நிலமாக பதிவாகியுள்ளது.
ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் குளம், 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, செடி, கொடிகள் வளர்ந்து, துார்த்து போனதுடன், குளத்தை சுற்றிலும் குப்பை கொட்டப் பட்டுள்ளது.
மேலும், குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. குளம் அமைத்துள்ள இடம் சத்திரம் சாவடி வகை நிலம் என்பதால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதிலும், நிர்வாக ரீதியாக நிதி ஒதுக்குவதிலும் சிக்கல் உள்ளது.
குளத்தை முறையாக பராமரிக்க, சத்திரம் சாவடி வகைப்பாட்டில் உள்ள குளத்தை, பேரூராட்சி நிர்வாகத்தின்பெயருக்கு பட்டா மாற்றித்தர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை, கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி, அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது.

