/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதாள சாக்கடை மூடி இன்றி திறந்து கிடப்பதால் அச்சம்
/
பாதாள சாக்கடை மூடி இன்றி திறந்து கிடப்பதால் அச்சம்
பாதாள சாக்கடை மூடி இன்றி திறந்து கிடப்பதால் அச்சம்
பாதாள சாக்கடை மூடி இன்றி திறந்து கிடப்பதால் அச்சம்
ADDED : செப் 06, 2025 02:49 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மூடிகள் இன்றி, ஆபத்தாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால், தொழிலாளர்கள் மற்றும் பகுதிமக்கள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில், சிப்காட் வளாகம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு, ஏற்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி போனதால், பல இடங்களில் துார்ந்து போனது.
கவனிப்பாரற்ற நிலையில், சாலை மற்றும் தெருக்களின் மத்தியில், மூடிகள் இன்றி பாதாள சாக்கடை காணப்படுகிறது. குறிப்பாக, ஏ.ஆர்.எஸ்., தொழிற்சாலை எதிரே உள்ள முக்கிய சாலையின் நடுவே, ஆறு இடங்களில் மூடிகள் இன்றி ஆபத்தாக உள்ளன.
இரவு நேரத்தில் அவ்வழியாக தொழிற்சாலைக்கு சென்று வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். புதிதாக அவ்வழியை கடந்து செல்பவர்கள், பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து எழுந்து செல்வதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த குழிகள் மூடப்பட வேண்டும், அதுவரை குழிகளை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும் பகுதி மக்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.