/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் அச்சம்
/
நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் அச்சம்
நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் அச்சம்
நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் அச்சம்
ADDED : செப் 08, 2025 01:16 AM

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ள புற்களை மேய வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக பகுதிக்கு உட்பட்ட, சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்துவது, மையப்பகுதியை ஆபத்தாக கடக்கும் இருசக்கர வாகனங்கள், எதிர்திசையில் வரும் வாகனங்கள் உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதை கண்காணிக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ரோந்து படையினரும், போலீசாரும் கண்டுகொள்வது கிடையாது என, வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் புற்களை மேய விடப்படும் மாடுகளால், விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
புல்லை உண்பதற்காக, சாலை மைய பகுதியில் கட்டப்படும் மாடுகள், திடீரென சாலைக்கு வரும் போது, வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக பகுதிக்கு உட்பட்ட சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வே ண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.