/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்
ADDED : அக் 04, 2024 02:30 AM

திருவள்ளூர்:திருமழிசை ஏரியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் அரசு உத்தரவுப்படி, சவுடு மண் அள்ளப்பட்டு லாரிகள் வாயிலாக, சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு மலைபோல் சவுடு மண் குவித்து செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், அவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், லாரிகளிலிருந்து சவுடு மண் சாலையில் சிதறி கொண்டே செல்கிறது. இதனால் பரவும் துாசியால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரும் தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.