/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் திரியும் கால்நடைகளால் அச்சம்
/
சாலையில் திரியும் கால்நடைகளால் அச்சம்
ADDED : செப் 24, 2024 06:31 AM

ஊத்துக்கோட்டை: சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ள இப்பகுதியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள பஜார் பகுதி வழியே ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்தல்.
கால்நடைகளை இப்பகுதி மக்கள் வீட்டில் கட்டி வளர்ப்பதில்லை. இதனால் இவை தீனிக்காக பஜார் பகுதியில் உள்ள காய்கறி, பூ, பழக்கடைகளுக்குசெல்கின்றன.
வியாபாரிகள் இவற்றை கம்பால் துரத்தும் போது, தறிகெட்டு ஓடுகிறது. அப்போது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
சாலையில் திரியும் மாடுகளை பிடிப்பதுடன், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர்எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் ஊத்துக்கோட்டையில் மாடுகள் தொடர்ந்து சாலையில் திரிகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.