/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியரை பதம்பார்க்க துடிக்கும் நிழற்குடையால் அச்சம்
/
பயணியரை பதம்பார்க்க துடிக்கும் நிழற்குடையால் அச்சம்
பயணியரை பதம்பார்க்க துடிக்கும் நிழற்குடையால் அச்சம்
பயணியரை பதம்பார்க்க துடிக்கும் நிழற்குடையால் அச்சம்
ADDED : நவ 27, 2024 12:58 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது சக்கரமநல்லூர் கிராமம்.
இப்பகுதிவாசிகள் அரக்கோணம், திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டு, கூரையின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால் நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.
மேலும் வெயில், மழைக்கு ஒதுங்ககூட பயன்படாத நிழற்குடையாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நிழற்குடையை அகற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.