/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துப்புரவு பெண் தொழிலாளி விபத்தில் பலி மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மறியல்
/
துப்புரவு பெண் தொழிலாளி விபத்தில் பலி மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மறியல்
துப்புரவு பெண் தொழிலாளி விபத்தில் பலி மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மறியல்
துப்புரவு பெண் தொழிலாளி விபத்தில் பலி மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மறியல்
ADDED : பிப் 01, 2025 09:50 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, வழுதிகைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மா, 48; இவர், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம், சோழவரம் அடுத்த, மாறம்பேடு பகுதியில், மேற்கண்ட சாலையோரங்களில் இருந்த மண்ணை அகற்றும் பணியில், சக தொழிலாளர்களுடன் இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, செங்குன்றத்தில் இருந்து, மீஞ்சூர் நோக்கி சென்ற, 'டாடா ஏஸ்' லாரி, குட்டியம்மா மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குட்டியம்மா உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சக தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் அங்கு கூடி, விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் வேண்டும் எனக்கூறி மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் -----------------, ----, மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.