/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறுவதை தடுக்க ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வேலி
/
மதுக்கூடமாக மாறுவதை தடுக்க ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வேலி
மதுக்கூடமாக மாறுவதை தடுக்க ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வேலி
மதுக்கூடமாக மாறுவதை தடுக்க ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வேலி
ADDED : செப் 23, 2025 12:14 AM

திருவள்ளூர்:மதுக்கூடமாக மாறிய பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், நெடுஞ்சாலைத் துறையினர் இரும்பு வேலி அமைத்துள்ளனர்.
திருவள்ளூர் - மணவாளநகர் இடையே கூவம் ஆற்றின் மேல், மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில், நரிக்குறவர்கள் பலர் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.
ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள இப்பகுதியில், அதிகாலை முதல் இரவு வரை பயணியர் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்த இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.
இந்த கடையில் இருந்து மதுபானம் வாங்குவோர், அங்குள்ள தியேட்டர் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமர்ந்து, மது அருந்தி வருகின்றனர். இதன் அருகே பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
குறிப்பாக, திருவள்ளூர் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையமும் உள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு செல்வோரும், பெரியகுப்பம் பகுதி மக்களும், 'குடி'மகன்களால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதை தொடர்ந்து, பெரியகுப்பம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து, தனியார் தியேட்டர் அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் வரை, ஒரு பகுதியில் மட்டும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பை எதிர்பகுதியிலும் அமைத்தால், 'குடி'மகன்களின் ஆக்கிரமிப்பில் இருந்து, அப்பகுதியை மீட்டு, பாதுகாப்பான பகுதியாக மாற்றலாம் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.