தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜாத்திரை திருவிழா விமரிசை

ஜாத்திரை திருவிழா விமரிசை

ஜாத்திரை திருவிழா விமரிசை


ADDED : ஏப் 23, 2025 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி,திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு எல்லையம்மன் மற்றும் சக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம். தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பூ கரகம் ஊர்வலமும் நடந்தது. மாலை 4:30 மணிக்கு திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

இரவு 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூகரகத்துடன் கிராமம் முழுதும் வீதியுலா வந்தார். இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாடகமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us