/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈகுவார்பாளையம் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
/
ஈகுவார்பாளையம் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : பிப் 19, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ஈகுவார்பாளையம் கிராமத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான இடம் என கூறப்பட்டதால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் பல ஆண்டு காலமாக முடங்கி இருந்தது.
சமீபத்தில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பள்ளி வளாகத்தில், 200 மரகன்றுகள் நடும் திட்டத்தை தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டமாக, நேற்று, பள்ளி வளாகத்தில், 10 மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில், மாணவர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.