/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி டேனியா குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கல்
/
சிறுமி டேனியா குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கல்
சிறுமி டேனியா குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கல்
சிறுமி டேனியா குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கல்
ADDED : பிப் 15, 2024 01:44 AM
திருவள்ளூர்:முகசீரமைப்பு சிகிச்சை பெற்ற சிறுமி டேனியா குடும்பத்தினருக்கு, வீடு கட்டிக் கொள்ள, மாவட்ட நிர்வாகம் சார்பில், 2 லட்சம் ரூபாய் நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சவுபாக்கியம் தம்பதியின் மகள் டேனியா, 9. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, சிகிச்சை அளிக்க தமிழக முதல்வருக்கு பெற்றோர் மனு அளித்தனர்.
முதல்வர் உத்தரவின்படி, 2022ம் ஆண்டு சவீதா மருத்துவமனையில் முகசீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2023ல் இரண்டாம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், சிறுமியின் குடும்பத்தாருக்கு, பாக்கம் கிராமத்தில், 1.48 லட்சம் ரூபாய் மதிப்பு நிலம் மற்றும் அனைவருக்கு வீடு வசதி திட்டத்தில், 2.10 லட்சம் ரூபாய் ஆணையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், அரசு மானியம் போக, கூடுதல் தொகையாக, 2 லட்சம் ரூபாயை, கலெக்டர் பிரபுசங்கர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று அவரது பெற்றோர் மற்றும் சிறுமி ஆகியோரிடம் வழங்கினார்.