/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காயலான் கடையில் தீ விபத்து கரும்புகை சூழ்ந்ததால் அவதி
/
காயலான் கடையில் தீ விபத்து கரும்புகை சூழ்ந்ததால் அவதி
காயலான் கடையில் தீ விபத்து கரும்புகை சூழ்ந்ததால் அவதி
காயலான் கடையில் தீ விபத்து கரும்புகை சூழ்ந்ததால் அவதி
ADDED : ஆக 28, 2025 01:58 AM

திருவேற்காடு:காயலான் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், கரும்புகை சூழ்ந்ததால் பகுதிமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காயலான் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, கடை அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பை கழிவுகள், திடீரென தீப்பிடித்து எரிந்தன. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, காயலான் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், நெடுஞ்சாலை முழுதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு லாரி டேங்கரில் இருந்த தண்ணீர் தீர்ந்ததால், அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரியை மடக்கி, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தால், காயலான் கடையில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மரப்பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

