/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து தீ விபத்து
/
பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து தீ விபத்து
ADDED : ஆக 25, 2025 10:53 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில், எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக சமையலரும், பள்ளி மாணவர்களும் காயமின்றி உயிர்தப்பினர்.
கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 13 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல், பள்ளி சமையல் அறையில், சமையலர் அபிராமி, மதிய உணவு சமைத்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக எரிவாயு கசிந்து சமையல் அறையில் தீப்பற்றியது. இதை கண்ட சமையலர், அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
பகுதிமக்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். விபத்தில், சிலிண்டர் மற்றும் அடுப்பு முற்றிலும் கருகியது. இந்த தீ விபத்தில் சமையலரும், பள்ளி மாணவர்களும் காயமின்றி உயிர்தப்பினர். பள்ளி நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், காயலார்மேடு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.