ADDED : செப் 03, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், கோட்டக்கரை பேருந்து நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரபல, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூம் இயங்கி வருகிறது.
நேற்று அதிகாலை, கடையின் முதல் தளத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஏராளமான மின் சாதன பொருட்கள் தீயில் கருதி நாசமானது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.