/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் தீ விபத்து உடைமைகள் நாசம்
/
வீட்டில் தீ விபத்து உடைமைகள் நாசம்
ADDED : டிச 17, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகரில் வசிப்பவர் முனியம்மாள், 72. நேற்று காலை, வீட்டை பூட்டிக் கொண்டு ஆடு மேய்க்க சென்றார். சிறிது நேரத்தில் வீடு தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சுவாமி கும்பிடுவதற்காக ஏற்றிய விளக்கை அணைக்காமல் சென்றதால், துணிகளில் தீ பற்றி வீடு எரிந்தது தெரியவந்தது. தீ விபத்தில், 1,500 ரூபாய் பணம், உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆதார், ரேஷன் உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாகின.