/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிசையில் தீ 'டிவி, ப்ரிஜ்' எரிந்து நாசம்
/
குடிசையில் தீ 'டிவி, ப்ரிஜ்' எரிந்து நாசம்
ADDED : நவ 20, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில், குடிசை வீட்டில் வசிப்பவர் சாம்சன், 34. நேற்று மதியம், வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்து, பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் வந்து, தீயை கட்டுப்படுத்தினர்.
தீயில், வீட்டில் இருந்த 'டிவி, ப்ரிஜ்' மற்றும் துணிகள், பாத்திரம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

