/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு 2 மணிநேரம் மட்டுமே அனுமதி
/
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு 2 மணிநேரம் மட்டுமே அனுமதி
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு 2 மணிநேரம் மட்டுமே அனுமதி
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு 2 மணிநேரம் மட்டுமே அனுமதி
ADDED : அக் 22, 2024 08:40 PM
திருவள்ளூர்:விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை, பாதுகாப்பாக கொண்டாடுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி தினத்தன்று சிறுவர் முதல் பெரியோர் வரை பட்டாசு வெடித்து மகிழ்வர். ஆனால், பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன. மேலும், ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதானோர், நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தீபாவளியன்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, திறந்த வெளியில் காலை 6:00-7:00 மற்றும் இரவு 7:00-8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
* குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசுபடுத்தும் தன்மை
கொண்ட பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும்.
*அதிக ஒலி எழுப்பும் மற்றும் சரவெடிகளை தவிர்க்கவும்.
*மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம், வழிபாட்டு தலம் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்.
*குடிசை பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.