/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் சிக்கும் மீன்கள்
/
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் சிக்கும் மீன்கள்
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் சிக்கும் மீன்கள்
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் சிக்கும் மீன்கள்
ADDED : டிச 20, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்,
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, ஏரியிலிருந்து உபரி நீர், கடந்த 14ம் தேதி வெளியேற்றப்பட்டு, 18ம் தேதி நிறுத்தப்பட்டது.
ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரில், கெண்டை, ஜிலேபி, கட்லா உள்ளிட்ட மீன்கள் அதிகம் வெளியேறின.
செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் வெளியேறி சென்ற பகுதிகளில் உள்ள குட்டைகளில், மீன்கள் அதிகம் உள்ளன.
இவற்றை உள்ளூர் மீனவர்கள் வலை வீசி பிடித்து விற்கின்றனர். ஜிலேபி 100 ரூபாய்க்கும், கெண்டை 200 ரூபாய்க்கும், விரால் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதை, பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.