/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
ADDED : மே 07, 2025 03:16 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 58. மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், சேகர் நீரில் மூழ்கினார். இரவு வரை வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருவள்ளூர் தீயணைப்பு துறையினர், பூண்டி நீர்த்தேக்கத்தில் தேடியபோது, சேகர் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.