/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சப்-கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் போராட்டம்
/
சப்-கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் போராட்டம்
ADDED : செப் 30, 2025 12:36 AM
பொன்னேரி:பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மீனவர்கள் இடையே நிலவி வரும் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காடு ஏரியில், அங்குள்ள மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஆண்டிகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக எல்லை பிரித்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்குள் எல்லை பிரச்னை ஏற்பட்டபோது, மீன்வளத்துறை நிர்ணயித்த எல்லைக்குள் தொழில் செய்யுமாறு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தற்போது எல்லை பிரச்னை துவங்கியது. அதற்கு தீர்வு காண வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் சார்பில் நேற்று பொன்னேரி சப்-கலெக்டர் அலுவகலம் முன் போராட்டம் நடத்தினர்.
மீன்வளத்துறை, வருவாய் துறை மற்றும் போலீசார் சமாதானம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், அங்கிருந்து கலைந்து சென்றனர்.