தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ராக்கெட் ஏவப்பட இருப்பதால் வரும் 3, 4ல் மீன் பிடிக்க தடை

ராக்கெட் ஏவப்பட இருப்பதால் வரும் 3, 4ல் மீன் பிடிக்க தடை

ராக்கெட் ஏவப்பட இருப்பதால் வரும் 3, 4ல் மீன் பிடிக்க தடை


UPDATED : செப் 01, 2026 08:53 PM

ADDED : செப் 01, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2026 08:53 PM ADDED : செப் 01, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:ராக்கெட் ஏவப்பட இருப்பதால், செப்டம்பர் 3 மாலை முதல் செப்டம்பர் 4 காலை வரை, திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள், வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதள மையத்தில் இருந்து, 4ம் தேதி, அதிகாலை 2:55 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-05 விண்கலம் (GSLV-F17 / EOS-05) ஏவப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதள மையம் அருகே, திருவள்ளூர் மாவட்ட மீனவ கிராமங்கள் அமைத்திருப்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், நாளை மாலை 4:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை, வங்க கடலில், மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை மீதான சுற்றறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் பொன்னேரி உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் சார்பில், அனைத்து மீனவ கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us