/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி ரயில் நிலையத்தில் தேனீ கொட்டி 5 பேர் பாதிப்பு
/
பொன்னேரி ரயில் நிலையத்தில் தேனீ கொட்டி 5 பேர் பாதிப்பு
பொன்னேரி ரயில் நிலையத்தில் தேனீ கொட்டி 5 பேர் பாதிப்பு
பொன்னேரி ரயில் நிலையத்தில் தேனீ கொட்டி 5 பேர் பாதிப்பு
ADDED : மே 18, 2025 02:15 AM

பொன்னேரி:பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதான நுழைவாயில் பகுதியில் உள்ள வேப்பமரத்தில், பெரிய அளவிலான தேன்கூடு உள்ளது. நேற்று காலை, திடீரென கூட்டில் இருந்து தேனீக்கள் கூட்டமாக வெளியேறி, ரயில் நிலையத்திற்கு வந்த பயணியரை சூழ்ந்தன.
தேனீக்கள் கொட்டியதில், 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், அதிக பாதிப்பிற்கு உள்ளான ஐந்து பேர், அருகில் இருக்கும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தேனீக்களை கண்டு பயணியர் அங்கும் இங்கும் ஓடியதால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேன் கூட்டை பறவைகள் கொத்தியதால், தேனீக்கள் கூட்டமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.