ADDED : நவ 24, 2024 01:50 AM
திருத்தணி,:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் திருத்தணி நகருக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின்படி தனிப்படை எஸ்.ஐ., குமார் தலைமையிலான போலீசார் நேற்று பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, பேருந்தில் இருந்த மூன்று பேரிடம், மொத்தம், 22 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா கடத்தி வந்தவர்கள் காஞ்சிபுரம் சேர்ந்த ரவிக்குமார், 65, ஆறுமுகம், 24, புளியமங்கலம் ஜெயக்குமார், 60 ஆகிய மூவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு, 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
திருவள்ளூரில் இருந்து வெங்கல் வழியே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
வெங்கல் போலீசார், கீழானுார் மின்வாரிய அலுவலகம் அருகே, நேற்று காலை வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், திருவள்ளூரில் வசித்து வரும் கங்காராம், 37, கீழானுார் ஏழுமலை, 37 என்பதும் தெரியவந்தது.
காரில் ஹான்ஸ், 247 கிலோ, கூலிப், 36 கிலோ, விமல் 19 கிலோ என, 302 கிலோ இருந்தது. இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.