/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலி நகை அடகு வைத்து மோசடி மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது
/
போலி நகை அடகு வைத்து மோசடி மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது
போலி நகை அடகு வைத்து மோசடி மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது
போலி நகை அடகு வைத்து மோசடி மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது
ADDED : அக் 08, 2024 09:12 PM
திருவாலங்காடு:ஆந்திர மாநிலம், மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடைய்யா மனைவி லதா, 48.
இவர் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் ரேகா என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த மாதத்தில் இருமுறை 49 கிராம் தங்க நகையை அடகு வைத்து, 2.15 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதையடுத்து நகை அடகு கடையின் உரிமையாளர் ரேகா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் போலி நகை கொடுத்து ஏமாற்றிய லதாவை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.
அவருக்கு ஆந்திராவை சேர்ந்த கவரிங் நகைகளை தங்கம் கலந்து விற்கும் கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ஆந்திராவுக்கு விரைந்தனர்
ஆந்திர மாநிலம், மதனபள்ளியை சேர்ந்த ராமாஞ்சநேயுலு 50, புத்துாரை சேர்ந்த சந்திரசேகர், 39 மற்றும் ரேணிகுண்டாவை சேர்ந்த ஹரித்தா , 34 திருத்தணி வி.கே.என். கண்டிகையை சேர்ந்த ரேகா, 35 துளசி, 28 ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.