/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 விக்கெட் வித்தியாசத்தில் எப்.எல்., அணி அபார வெற்றி
/
10 விக்கெட் வித்தியாசத்தில் எப்.எல்., அணி அபார வெற்றி
10 விக்கெட் வித்தியாசத்தில் எப்.எல்., அணி அபார வெற்றி
10 விக்கெட் வித்தியாசத்தில் எப்.எல்., அணி அபார வெற்றி
ADDED : அக் 02, 2025 10:42 PM
சென்னை :ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 'ப்ரீ லான்சர்ஸ்' எனும் எப்.எல்., அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. சென்னை, சந்தோஷபுரத்தில் உள்ள சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், க்ரூவ் கிளப் அணி, எப்.எல்., அணியை எதிர்த்து போட்டியிட்டது. டாஸ் வென்ற எப்.எல்., அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட் செய்த க்ரூவ் அணி, 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து,99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்காக பரத் 23, வேதராமன் 22 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய எப்.எல்., அணி, 14.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான திருமூர்த்தி 50, மகேஷ் 47 ரன்கள் எடுத்து அசத்தினர்.