/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென் மண்டல ஓபன் வாலிபால் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்
/
தென் மண்டல ஓபன் வாலிபால் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்
தென் மண்டல ஓபன் வாலிபால் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்
தென் மண்டல ஓபன் வாலிபால் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்
ADDED : அக் 02, 2025 10:41 PM

சென்னை, தென் மண்டல ஓபன் வாலிபால் போட்டியில், 17, 19 வயது பிரிவில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடத்தை கைப்பற்றியது.
'ஸ்கை ஸ்பைக்கர்ஸ்' வாலிபால் கிளப் சார்பில், தென் மண்டல ஓபன் வாலிபால் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் நேற்று முன் தினம் நிறைவடைந்தது.
இதில், 12, 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடந்தன. இதில், 12 வயது சிறுவருக்கான இறுதிப் போட்டியில், ஸ்கை ஸ்பைக்கர்ஸ் அணி, 25 - 19, 25 - 21 என்ற செட் கணக்கில், செயின்ட் பீட்ஸ் பள்ளியை தோற்கடித்து முதலிடம் பிடித்தது.
சிறுமியரில், பம்ஸ் நின்னக்கரை அணி, 25 - 20, 25 - 23 என்ற செட் கணக்கில், ஸ்கை ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
சிறுவருக்கான 14 வயது பிரிவில், பம்ஸ் நின்னக்கரை அணி, 25 - 20, 25 - 18 என்ற செட் கணக்கில் ஸ்கை ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. சிறுமியரில் லேடி சிவசாமி அணி, 25 - 20, 25 - 21 என்ற செட் கணக்கில், மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ., பள்ளியை தோற்கடித்தது.
அதேபோல், 17 வயது சிறுவரில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி, 25 - 23, 25 - 23 என்ற செட் கணக்கில், சி.எஸ்.ஐ., மெல்ரோசா புரம் அணியை வீழ்த்தியது.
சிறுமியரில் லேடி சிவசாமி அணி, 25 -23, 25 - 23 என்ற செட் கணக்கில் சி.எஸ்.ஐ., மெல்ரோசாபுரம் அணியை தோற்கடித்தது.
இறுதியாக, 19 வயது ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி 15 - 18, 25 - 22 என்ற செட் கணக்கில், செங்கை செயின்ட் கொலம்பஸ் அணியை தோற்கடித்து, முதலிடத்தை தட்டிச் சென்றது.