/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடியாத மழைநீரால் திருமழிசை பகுதியில் அவதி
/
வடியாத மழைநீரால் திருமழிசை பகுதியில் அவதி
ADDED : அக் 22, 2024 07:34 AM

திருவள்ளூர்:கடந்த சில தினங்களாக பெய்த மழையால் திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
மழை நின்று நான்கு நாட்களாகியும் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பட்டேல் தெரு உட்பட பலதெருக்களில் மழைநீர் வடியவில்லை.
இதனால், இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் அலட்சியம் காட்டி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்டநிர்வாகம் திருமழிசைபேரூராட்சியில் ஆய்வு செய்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு மென, ஒன்பது வார்டு பகுதிவாசிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.