/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாற்றின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு: வாகனங்களுக்கு தடை
/
நந்தியாற்றின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு: வாகனங்களுக்கு தடை
நந்தியாற்றின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு: வாகனங்களுக்கு தடை
நந்தியாற்றின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு: வாகனங்களுக்கு தடை
ADDED : டிச 04, 2024 01:43 AM

திருத்தணி:திருத்தணி - பொதட்டூர்பேட்டை முதன்மை மாநில நெடுஞ்சாலை, அகூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறையினர் தரைப்பாலம் கட்டி வாகனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளனர்.
'பெஞ்சல்' புயலால் பெய்த கனமழையால் நந்தியாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தன. இந்நிலையில், நேற்று அதிகாலையில், சோளிங்கர் ஏரியில் இருந்து உபரிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று, மாலை 4:30 மணியளவில் எம்.ஜி.ஆர்.நகர் தரைப்பாலத்தின் மீது இரண்டரை அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், திருத்தணி போலீசார் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து காவல் பணியில் உள்ளனர். தற்போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் மக்கள் கடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் அதிகரித்தால் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படும். இவ்வழியாக வரும் வாகனங்கள், அகூர், கே.ஜி.கண்டிகை, நொச்சிலி வழியாக பொதட்டூர்பேட்டைக்கு போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.