/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் குட்டி தீவாக மாறியது நத்தமேடு
/
1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் குட்டி தீவாக மாறியது நத்தமேடு
1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் குட்டி தீவாக மாறியது நத்தமேடு
1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் குட்டி தீவாக மாறியது நத்தமேடு
ADDED : அக் 29, 2025 02:28 AM

ஆவடி: நத்தமேடு ஏரி நிரம்பி, சுற்றுவட்டார 1,000க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால், அப்பகுதி தீவு போல மாறி வருகிறது.
திருநின்றவூர் அடுத்த நத்தமேடு ஊராட்சியில் 429 ஏக்கர் பரப்பளவு உடைய நத்தமேடு ஏரி அமைந்துள்ளது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நத்தமேடு ஏரியில், 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நத்தமேடு ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான, நத்தமேடு அண்ணா நகர், கிழக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, குடியிருப்பை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும், கட்டுவிரியன், நீர்ப்பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நத்தமேடு ஏரியை துார்வாரி, வரும் ஆண்டுகளிலாவது வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

