/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தளபதி பள்ளியில் உணவுத் திருவிழா விமரிசை
/
திருத்தணி தளபதி பள்ளியில் உணவுத் திருவிழா விமரிசை
ADDED : நவ 09, 2025 04:11 AM

திருத்தணி: திருத்தணி தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில், 400 மாணவ - மாணவியர் பங்கேற்ற உணவுத் திருவிழாவை, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.
திருத்தணி ம.பொ.சி.சாலையில் இயங்கி வரும் தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில், மெகா உணவுத் திருவிழா, பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் பாலாஜி வரவேற்றார்.
இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, உணவுத் திருவிழாவை துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில், முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள, 400 பள்ளி மாணவ - மாணவியர், அனைத்து மாநில உணவு வகைகளை தயாரித்து, மக்கள் மற்றும் மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உணவு வகைகளின் பயன்கள் மற்றும் தயாரிப்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியில், முருகன் கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, தலைமை ஆசிரியை கவின்பாரதி உட்பட பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

