/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர், மின்சாரம் துண்டிப்பு அகரம் மக்கள் சாலை மறியல்
/
குடிநீர், மின்சாரம் துண்டிப்பு அகரம் மக்கள் சாலை மறியல்
குடிநீர், மின்சாரம் துண்டிப்பு அகரம் மக்கள் சாலை மறியல்
குடிநீர், மின்சாரம் துண்டிப்பு அகரம் மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 09, 2025 04:12 AM

திருவள்ளூர்: குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் அகரம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார், அகரம் சன் சிட்டி குடியிருப்பில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை குடியிருப்பு மக்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்கப்பட்டு, சங்க நிர்வாகத்திடம் மாதந்தோறும், குடியிருப்பு மக்கள் சந்தா செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மின் மோட்டாருக்கான இணைப்புக்கு, மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, 16 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், குடிநீர் கட்டணமும் ஊராட்சிக்கு முறையாக செலுத்தாததால், ஐந்து நாட்களுக்கு முன், குடியிருப்பு மக்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை, மின்சார வாரியமும், ஊராட்சி நிர்வாகமும் துண்டித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சன்சிட்டி குடியிருப்பில் வசிப்போர், திருவள்ளூர் - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சு நடத்தியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக, அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

