/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரியல் எஸ்டேட் தொழிலில் முன்பகை முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை
/
ரியல் எஸ்டேட் தொழிலில் முன்பகை முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை
ரியல் எஸ்டேட் தொழிலில் முன்பகை முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை
ரியல் எஸ்டேட் தொழிலில் முன்பகை முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை
ADDED : பிப் 12, 2025 10:19 PM
திருவாலங்காடு:சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளிகளான மணிகண்டன், 23, லோகேஸ்வரன், 23, மற்றும் ஸ்ரீராம், 22, உள்ளிட்ட மூவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்கள் தலைமறைவாக இருந்தனர்.
அவர்களை சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் மூவரும் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த, பகவதிபட்டாபிராமபுரத்தில் கழனியில் உள்ள ஷெட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி மூவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தங்க இடமளித்த அதே கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும், தற்போது திருவள்ளூரில் வசித்து வரும் சதீஷ், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நால்வரிடமும் போலீசார் நடத்திய விசாரணை:
திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான வெங்கடேசன், 47, என்பவருக்கும், சதீஷூக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது.
கடந்த 3ம் தேதி, வெங்கடேசன் வீட்டிலிருந்து, திருவள்ளூருக்கு அத்திப்பட்டு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, ராமலிங்காபுரம் அருகே, 'வோக்ஸ்வாகன்' காரில் மோதி, கொலை செய்ய முயன்றோம்.
அப்போது, தப்பிய நிலையில், சம்பவ இடத்தில், சதீஷ் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த், உடன், மூன்று பேரும் சேர்ந்து ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்தார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை போலீசார் நால்வரிடத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சதீஷின் தம்பி பிரசாந்தை நேற்று முன்தினம் இரவு, திருவாலங்காடு போலீசார் பகவதி பட்டாபிராமபுரத்தில் கைது செய்தனர்.