/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூதாட்டி வெட்டிக் கொலை 'மாஜி' பி.எஸ்.எப்., வீரருக்கு வலை
/
மூதாட்டி வெட்டிக் கொலை 'மாஜி' பி.எஸ்.எப்., வீரருக்கு வலை
மூதாட்டி வெட்டிக் கொலை 'மாஜி' பி.எஸ்.எப்., வீரருக்கு வலை
மூதாட்டி வெட்டிக் கொலை 'மாஜி' பி.எஸ்.எப்., வீரருக்கு வலை
ADDED : ஜூன் 18, 2025 02:31 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த மீசரகாண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள், 67. இவரது மகன் முருகன், அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரான கடிகாசலம், 49, என்பவரிடம் 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கடிகாசலம் அந்த பணத்தை திரும்ப தரும்படி முருகனிடம் கேட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 2 லட்சம் ரூபாய் திரும்ப கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தையும் கடிகாசலம் திரும்ப தரும்படி, தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை முருகனின் தாயிடம் பணத்தை கேட்டு கடிகாசலம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கடிகாசலம் அவரது கையில் வைத்திருந்த கத்தியால், வள்ளியம்மாளை வெட்டினார்.
இதில், சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் இறந்தார். ஆர்.கே.பேட்டை போலீசார், வள்ளியம்மாளின் சடலத்தை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளி கடிகாசலத்தை தேடி வருகின்றனர்.