/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாடகைதாரரை வௌியேற்ற அரிவாளுடன் பாய்ந்த 'மாஜி' எஸ்.ஐ.,
/
வாடகைதாரரை வௌியேற்ற அரிவாளுடன் பாய்ந்த 'மாஜி' எஸ்.ஐ.,
வாடகைதாரரை வௌியேற்ற அரிவாளுடன் பாய்ந்த 'மாஜி' எஸ்.ஐ.,
வாடகைதாரரை வௌியேற்ற அரிவாளுடன் பாய்ந்த 'மாஜி' எஸ்.ஐ.,
ADDED : ஜூன் 26, 2025 02:06 AM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு, 38; பா.ஜ., பிரமுகர். எளாவூர் பஜார் பகுதியில் உள்ள வணிக கட்டடம் ஒன்றில், வாடகைக்கு அறை எடுத்து கட்சி அலுவலகம் மற்றும் சிட் பண்ட் நடத்தி வருகிறார்.
அந்த வணிக கட்டடத்தை, சின்னஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ., முனிரத்தினம், 63, தனஞ்செழியன் என்பவரிடம் ஐந்து மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளார்.
அதில், வாடகைக்கு இருந்து வரும் தியாகுவை காலி செய்யும்படி, முனிரத்தினம் தெரிவித்துள்ளார். வேறு இடம் கிடைக்க தாமதமானதால் காலஅவகாசம் கேட்டுள்ளார். ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், அலுவலகம் காலி செய்யப்படாமல் இருந்தது.
நேற்று மாலை கூட்டாளிகள் இருவருடன், அரிவாளுடன் வந்த முனிரத்தினம் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அரிவாளை ஓங்கியபடி தியாகுவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதை பார்த்த தியாகுவின் 10 வயது மகள், அச்சத்தில் பதறியடித்து அங்கும் இங்கும் ஓடியது.
தொடர்ந்து, அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை முனிரத்தினம் வெளியே வீசினார். தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் எஸ்.ஐ., ஆறுமுகம், முனிரத்தினத்தை சமாதானம் செய்ய முயன்றார். அதையும் மீறி மீண்டும் தன் அத்துமீறல்களை தொடர்ந்தார்.
இச்சம்பவம் 'சிசிடிவி' கேமரா பதிவுகள், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
தியாகு அளித்த புகாரின்படி, முனிரத்தினம், அவரது கூட்டாளிகளான கபில், அருணாச்சலம் ஆகிய மூவர் மீது ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.