/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடை கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
/
ஓடை கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
ஓடை கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
ஓடை கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
ADDED : டிச 25, 2024 02:16 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் அருகே உருவாகும் ஓடை நீர் சின்னம்மாபேட்டை, பழையனூர், கூடல்வாடி, மஞ்சாகுப்பம் வழியாக கொசஸ்தலையாற்றில் கலந்து பின் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடைகிறது.
தற்போது, சின்னம்மாபேட்டை ஓடை கால்வாயில் வியாசபுரம் செல்லும் சாலையில் சமீபகாலமாக கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் மூட்டைகளில் அடைத்து கொண்டு வந்து வீசிச் செல்வது தொடர்வதால் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து கால்நடை மேய்ப்பவர்கள் கூறியதாவது:
மேய்ச்சலுக்கு வரும் 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு ஓடை நீரே ஆதாரமாக உள்ளது. கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கால்நடைகள் ஓடை நீரை பருகுவதால் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
கழிவுகள் கலப்பால் நீரின் தரம் மாறி உள்ளது. இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுகள் கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

