ADDED : செப் 24, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, செப். 25–
திருத்தணி நகராட்சி பகுதியைச் சேர்ந்த, 17 வயது மாணவி ஒருவர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம், தாழவேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர், நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும், மாணவியின் உறவினர்களான, திருத்தணி பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ், 31, சுசில், 27, ரோசி, 25, மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோர், விஷ்ணுவை பெரியார் நகர் குளக்கரை அழைத்து சென்று, உருட்டை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயமடைந்த விஷ்ணுவை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட நால்வரையும் தேடி வருகின்றனர்.
