மாற்றுத்திறனாளி மாணவ – மாணவியர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளி மாணவ – மாணவியர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 25, 2026 02:30 PM
திருவள்ளூர், செப். 26–
மாற்றுத்திறனாளி மாணவ – மாணவியர், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக, 2026 – -27ம் நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை எண்ணுடன் கூடிய மருத்துவச் சான்று, பள்ளியில் பயின்று வருவதற்கான சான்று, முந்தைய மதிப்பெண் பட்டியல், வங்கிக் கணக்கு புத்தகம், யு.டி.ஐ.டி., மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், இ – சேவை மையங்களில், https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, நவ., மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
