/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய நான்கு பேர் கைது
/
இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய நான்கு பேர் கைது
ADDED : ஜூன் 27, 2025 10:51 PM
திருத்தணி,:
இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித், 18. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த புதன்கிழமை இரவு சுமித் தாழவேடு சமத்துவபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, வேலஞ்சேரியை சேர்ந்த 4 இளைஞர்கள் பீர் பாட்டிலால் சுமித்தின் தலையில் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்தவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களாகவே தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், அருகில் உள்ள வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே போஸ்டர் ஒட்டுவது, பஸ்சில் பயணம் செய்வதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.