/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோகைன் கடத்திய நான்கு பேர் கைது
/
கோகைன் கடத்திய நான்கு பேர் கைது
ADDED : அக் 29, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கோகைன் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், மூன்று கிராம் கோகைன் போதை பொருள் சிக்கியது.
அதன் மதிப்பு, 30,000 ரூபாய் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்த போலீசார், காரில் பயணித்த சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த ஆரிப் அகமது, 25, ஏழு கிணறு பகுதியை சேர்ந்த ஜோயல், 23, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜமில் ரகுமான், 35, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

