/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் திருடர்கள் நான்கு பேர் கைது
/
பைக் திருடர்கள் நான்கு பேர் கைது
ADDED : ஜூலை 27, 2025 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:அடுத்தடுத்த மூன்று கிராமங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகர், அத்திமாஞ்சேரிபேட்டை, கோணசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த வாரம் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் திருடு போயின.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், திருத்தணி அடுத்த வீரகநல்லுாரைச் சேர்ந்த சின்னராஜ், 25, பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அருள்குமார், 19, ராணிப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், 19, தினேஷ்குமார், 21, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.